அமெரிக்காவில் விசா மோசடிக்காக போலி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக....
அமெரிக்காவில் விசா மோசடிக்காக போலி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக 11 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவில் யு -விசா பெறுவதற்காக இந்த சதி திட்டத்தை செய்துள்ளனர். அமெரிக்காவில் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விசா யூ விசா. இந்தியர்கள் போலி கொள்ளை சம்பவங்களை உருவாக்கி அதில் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரை ஆதாரமாக காட்டி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர் .நீயூ ஆர்லியன்ஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Tags :


















