சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து சாராயத்தை பறிமுதல் செய்த பொதுமக்கள்.

by Editor / 03-10-2022 11:16:15am
சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து சாராயத்தை பறிமுதல் செய்த பொதுமக்கள்.

சேலம் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் எல்லையான கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சப்பட்டு ஆத்தூர் தலைவாசல் வாழப்பாடி வழியாக கொண்டு செல்கின்றனர்.அதனை தடுக்க இரு மாவட்ட போலீசாரும், கல்வராயன் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் போடப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதனை அழித்து வருகின்றனர்.இருந்த போதும் தொடர்ந்து தலைவாசல் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகின்றன.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடி பகுதியில் பாக்கெட்டுகளில்  சாராயம் வைத்து இரு சக்கர வாகனத்தில் வீடு வீடாக  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து சாராய விற்பனையினைத் தடுக்க அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்துகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மறைத்து வைத்து சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருநபரை பொதுமக்கள் பிடிக்க முயற்சித்தனர் அப்போது மூட்டையில் வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்டுகளை போட்டுவிட்டு பொதுமக்களிடமிருந்து சாராய வியாபாரி தப்பினார்.இதுகுறித்து தகவல் இருந்து வந்த வீரகனூர் போலீசார் நிகழ்வு இடத்தில் விசாரணை மேற்கொண்டார் மேலும் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய சாராய  வியாபாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

 

Tags :

Share via