சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சனம்16,000 போலீசார் பாதுகாப்பு பணியில்

நாடெங்கிலும் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாலகலமாக கொண்டாடப்பட்டது.இதனைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் விஜர்சனம் நாட்டிலுள்ள நீர்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்துவருகின்றன.சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1,519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகின்றன. சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது வண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விஜர்சனம் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Tags : சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சனம்16,000 போலீசார் பாதுகாப்பு பணியில்