ஆயுத பூஜை, தீபாவளி: தாம்பரம் -நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

by Editor / 07-10-2021 04:28:35pm
ஆயுத பூஜை, தீபாவளி:  தாம்பரம் -நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

ஆயுத பூஜை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்க்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
* தாம்பரம் நாகர்கோவில் (வண்டி எண்: 06003) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 3-ந்தேதிகளில் இரவு 9.40 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.


* நாகர்கோவில் தாம்பரம் (06004) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 7-ந்தேதிகளில் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via