பாலியல் தொழில்; பெண் புரோக்கர் உட்பட 4 பேர் கைது
கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றது தெரியவந்தது. விபச்சார புரோக்கர்கள் கோவை வீரகேரளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (30), மசாஜ் சென்டர் மேலாளர் சாஜிதா (35) ஆகிய இருவரை கைது செய்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
இதேபோல், கவுண்டம்பாளையம் சேரன் நகரில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் இளம்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் புரோக்கர்கள் கோவை டாடாபாத்தை சேர்ந்த ராஜா(31), சங்கர்பாபு (34) ஆகிய இருவரை கைது செய்தனர். 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
Tags :