திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கின் 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்(PCR) நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ்குமார் அவர்கள் குற்றவாளிகளான பொன்னுமணி, குட்டி ராஜ், குருசாமி, கண்ணன், உலக்கன், காளிராஜ், கண்ணன், பாலமுருகன், முத்துகிருஷ்ணன், கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும் மேற்படி நபர்களின் தண்டனை விபரங்கள் 26.09.2024 அன்று அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த திருவேங்கடம் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்..
Tags : திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கின் 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு