சரோஜா தேவி மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல் பதிவு

கன்னட பைங்கிளி என போற்றப்பட்ட நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14) காலமானார். இந்நிலையில், அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி, இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார். சரோஜா தேவி, தமிழ் திரையுலகில் சுமார் 17 ஆண்டுகள் மிகப்பெரிய வெற்றி நடிகையாகவும் வலம்வந்தவர்.
Tags :