ஆந்திரப் பிரதேசம்கோயில் கூட்டநெரிசலில் சிக்கி குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசம்கோயில் கூட்ட நெரிசல்: ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தம் x பதிவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசி புக்கா வெங்கடேஸ்வரா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் பக்தர்கள் இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது .உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டதோடு ,சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிவாரண பணிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளதாகவும் கருத்தை பதிவிட்டுள்ளார்..மோந்தா புயலின் தாக்கத்திலிருந்து விடுபட்ட ஆந்திரா மீண்டும் ஒரு சோகத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















