பிரசாந்த் கிஷோர் கருத்து-அதிர்ச்சியில் அரசியல்கட்சியினர் 

by Editor / 02-11-2024 07:31:59pm
 பிரசாந்த் கிஷோர் கருத்து-அதிர்ச்சியில் அரசியல்கட்சியினர் 

பீஹாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின் போது தேர்தல் வியூகவாதியாக தனது சம்பளத்தை பிரசாந்த் கிஷோர் வெளிப்படுத்தினார். பெலகஞ்சில் நடந்த ஒரு நிகழ்வில், அவர் :என்னுடைய பிரசாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா?

தேர்தலுக்கு ஒருவருக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி. இதுபோன்ற ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரசாரத்திற்கு செலவு செய்ய முடியும் என்று பிரசாந்த் கிஷோர் பேசினார்.தன் சம்பளத்தைப் பற்றி பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக பேசியிருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :  பிரசாந்த் கிஷோர் கருத்து-அதிர்ச்சியில் அரசியல்கட்சியினர் 

Share via

More stories

Logo