கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவ பிரான்ஸ், சீனா தயார் என அறிவிப்பு
கொரோனாவிற்கு எதிரான போரில், இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "மீண்டும் எழுந்துள்ளகொரோனா அலையின் எழுச்சியை எதிர்கொண்டு வரும் இந்திய மக்களுக்கு, ஒற்றுமைக்கான செய்தியை அனுப்ப விரும்புகிறேன். யாரையும் விட்டுவைக்காத இந்தப் போராட்டத்தில், பிரான்ஸ் உங்களுடன் (இந்தியர்களுக்கு) இருக்கிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உதவ சீனாவும் முன்வந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. "தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சீன அரசாங்கமும் மக்களும், இந்திய அரசாங்கத்தையும் இந்திய மக்களையும் உறுதியாக ஆதரிக்கின்றனர். மேலும், இந்தியத் தரப்பின் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவையும் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளனர். இதுதொடர்பாக சீன தரப்பு, இந்திய தரப்புடன் தொடர்பில் இருந்து வருகிறது" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா அலையை எதிர்கொள்ளும் இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு, ஆஸ்திரேலியா ஒற்றுமையை தெரிவிக்கிறது. எங்கள் பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கிய இந்தியாவின் தலைமைத்துவமும், பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது' எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்,
Tags :