நூறாண்டு பழமை வாய்ந்த நுழைவுப் பகுதி இடித்து அகற்றப்பட்டது.

by Editor / 25-09-2025 07:53:25am
நூறாண்டு பழமை வாய்ந்த நுழைவுப் பகுதி இடித்து அகற்றப்பட்டது.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்  ,திருவிதாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த பொழுது 150 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு துவார பாலகர் சிலையோடு அமைக்கப்பட்ட நுழைவுப் பகுதி  கனரக வாகனங்களின் வருகையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதம் ஏற்பட்டது.. இதன் தொடர்ச்சியாக ,அந்த வளைவை அகற்றிவிட்டு புதியதாக வளைவு அமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை தொடர்ந்து., செங்கோட்டை ,நகர மக்களால் எழுப்பப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக ,தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரின் சீரிய முயற்சியின் காரணமாக ரூபாய் 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை பிரதான சின்னங்கள் பராமரிப்பு பிரிவின் சார்பில், புதியதாக நுழைவு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்த புள்ளிகளும் விடப்பட்டன... இதன் தொடர்ச்சியாக 25ஆம் தேதி இன்று அதிகாலை 4 மணி முதல் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மருத்துவத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் குவிக்கப்பட்டு இரண்டு துவார பாலகர்.சிலைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது...

அதன் பின்பு நுழைவு வாயில் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக இடித்து அகற்றப்பட்டது. .செங்கோட்டை நகரி வரலாற்று சிறப்புமிக்க பிரதான சின்னமாக விளங்கிய நுழைவுப் பகுதி இடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது ..அதே சமயம் ,புதிய வளைவு விரைவில் கட்ட வேண்டும் என்கின்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது. .இந்த நிகழ்வின்போது, தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் ,சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி ,செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி ,முன்னாள் நகர் மன்ற தலைவர் ரஹீம், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர், செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர், மின்வாரிய அதிகாரிகள்,, பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த பணியின் போது உடன் இருந்தனர்.

 

Tags : நூறாண்டு பழமை வாய்ந்த நுழைவுப் பகுதி இடித்து அகற்றப்பட்டது.

Share via