முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த. வெ. க தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பட்டினபாக்க வீட்டில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழக வெற்றி கழகத்தினுடைய நிர்வாகத்தை வழி நடத்திச் செல்வதற்குரிய பொறுப்பும் கோவையை வசப்படுத்தும் நோக்கில் கோவை மண்டல பொறுப்பாளர் பதிவியும்ம் அளிக்கப்படலாம் என்றும் நாளை இது குறித்தான செய்திகள் வெளியாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல். செங்கோட்டையன் வருகையால் த. வெ. க விற்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். அனுபவசாலியான செங்கோட்டையன் கட்சியை வழி நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கலாம். கட்சியின் உட்பட்ட அமைப்பினை பலப்படுத்துவதற்கான நெறிப்படுத்தல் முறையையும் வகுத்த அளிக்கலாம்..
Tags :



















