10 ரூபாய்20 ரூபாய் 50 ரூபாய் சிறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்கும் புதிய ஏ. டி. எம்
பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் சில்லறை தட்டுப்பாட்டை போக்க குறைந்த மதிப்புள்ள நோட்டுக்களை வழங்கு வகையில் 10 ரூபாய்20 ரூபாய் 50 ரூபாய் சிறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்கும் புதிய ஏ. டி. எம் இயந்திரங்களை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது .இந்திய அரசு. பல வங்கிகள் தற்போது கார்டு இல்லாமலேயே கியூஆர்கோட் மூலம் பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய ஏடிஎம்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் நூறு ரூபாய்க்கும் குறைவான தொகையையும் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில்லறை நோட்டுகள் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தொடர்ந்து அறிவித்து வருகிறது .கிராமப்புற மற்றும் நகரப்புறங்களில் சில்லறை தேவைகளுக்காக பெரிய நோட்டுக்களை மாற்ற வேண்டிய அவசியம் இனி இருக்காது.
Tags :


















