தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது.

by Admin / 28-01-2026 02:11:21am
தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில்  முன்னாள் ராணுவ வீரர் கைது.

தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பாலமுருகன் என்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் .விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பால முருகனை சென்னை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த அந்த நபர் முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார். விசாரணையில் மது போதையில்  மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இந்த மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்தது. மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிய நிபுணர்களுடன் முதலமைச்சரின் இல்லத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் அது வெறும் மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக திருவான்மியூரை சேர்ந்த பெயிண்டர் ஒருவரும் இதே போன்று மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via