செந்தில் பாலாஜி ஜாமின் மனு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையான குணமடையாததால் ஜாமின் அனுமதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பின்னர் அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Tags :