திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

by Editor / 31-12-2024 11:49:53am
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா  திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள  திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது  இச்சிலையை அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா 3 நாட்கள் கொண்டாட திட்டமிட்ட நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டது.

அதேபோன்று நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நேற்று திறந்து வைத்தார்.

நேற்று  கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் வெள்ளி விழாவின் இரண்டாவது நாளான இன்று திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்ட திருக்குறள் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா  திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
 

Tags : திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Share via