பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 4 கோடியே 67 லட்சம் ரூபாய் காணிக்கை

by Editor / 31-12-2024 11:41:54am
 பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 4 கோடியே 67 லட்சம் ரூபாய் காணிக்கை

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாடு,வெளிநாடு,மற்றும் பல்வேறு மாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. 1069 வெளிநாட்டு கரன்சிகள், 1012 கிராம் தங்கம், 17062 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன.

 

Tags :  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 4 கோடியே 67 லட்சம் ரூபாய் காணிக்கை

Share via

More stories