நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கு வாபஸ்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாபஸ் பெற்றதால் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, மாணவர் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags :