பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்துத் துறை உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், பேரிடரை எதிர்கொள்ள சென்னை மாநகரில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
Tags :