மன்னார்குடியில் 18 கோடி ரூபாய் செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்று இருந்தார். நேற்று அவர் பொது மக்களை சந்திக்கும் முகமாக ரோடு ஷோவின் பங்கேற்று மக்களோடு கைகொடுத்தும் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை பெற்றும் இருந்தார் .இந்நிலையில், இன்று அவர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட் பகுதியில் 11 கோடி ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கும் நன்னிலம் வண்டாம் பாளை ஊராட்சியில் 56 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் திருவாரூர் மாவட்ட மாதிரி பள்ளியும் மன்னார்குடி பகுதியில் மாணவிகள் பயன்பெறும் வகையில் மன்னார்குடி நகராட்சியில் 18 கோடி ரூபாய் செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டார் .846 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 1234 முடிவெட்ட பணிகளை திறந்து வைத்து 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கும் நாட்டி 6781 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

Tags :