ஆணுறுப்பில் வெயிட்டை கட்டி தொங்கவிட்ட கொடூரம் 5 பேரை ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

by Staff / 12-02-2025 03:37:40pm
ஆணுறுப்பில் வெயிட்டை கட்டி தொங்கவிட்ட கொடூரம் 5 பேரை ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கேரளாவில் கோட்டயம் அரசு நர்ஸிங் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களாக நிர்வாணம் ஆக்கியும், அந்தரங்க உறுப்புகளில் பளு தூக்கும் உபகரணத்தை (DUMBBELL) தொங்கவிட்டும், காம்பஸால் குத்தியும், 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடுமை படுத்தி வந்துள்ளனர். இந்த செயல்களை வீடியோ எடுத்தும் மிரட்டி வந்துள்ளனர். நீண்டகாலம் நடந்த இந்த கொடுமையை பொறுக்க முடியாமல், 3 மாணவர்கள் அளித்த புகாரின்பேரில் 5 பேரை ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via