இன்றும் ,நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம் -மீனவர்களுக்கு வேண்டுகோள்

தூத்துக்குடி மற்றும் குமரி கடல் பகுதி தென் தமிழக கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அவ்வப்போது சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இன்று மற்றும் ஏப்ரல் 11 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags : இன்றும் ,நாளையும் கடலுக்கு செல்லவேண்டாம் -மீனவர்களுக்கு வேண்டுகோள்