2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 131 விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அடங்கும்.
பத்ம விபூஷண்-
தர்மேந்திர சிங் தியோல் (மறைவிற்குப் பின்),
வி.எஸ். அச்சுதானந்தன் (மறைவிற்குப் பின்),
என். ராஜம் (இசை), கே.டி. தாமஸ் (சட்டம்),
பி. நாராயணன் (இலக்கியம்).
பத்ம பூஷண்-
மம்மூட்டி (கலை),
அல்கா யாக்னிக் (கலை),
உதய கோடக் (வர்த்தகம்),
பகத் சிங் கோஷியாரி (பொது வாழ்வு),
ஷிபு சோரன் (மறைவிற்குப் பின்).
பத்ம ஸ்ரீ -
ரோஹித் சர்மா (விளையாட்டு),
ஹர்மன்பிரீத் கவுர் (விளையாட்டு),
சதீஷ் ஷா (மறைவிற்குப் பின்)
புரோசென்ஜித் சாட்டர்ஜி (கலை).
தமிழ்நாட்டைச் சேர்ந்த விருது பெற்றவர்கள்,
காளியப்ப கவுண்டர் - கலை.
திருவாரூர் பக்தவத்சலம் - கலை (மிருதங்கம்).
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் - கலை.
டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன் - கால்நடை அறிவியல்.
ஆர். கிருஷ்ணன் - கலை (குரும்பா ஓவியக் கலைஞர்).
கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி - மருத்துவம்.
விருது பெற்றவர்களில் 19 பேர் பெண்கள், 6 பேர் வெளிநாடு பிரிவைச் சேர்ந்தவர்கள். 16 பேருக்கு மறைவிற்குப் பின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tags :















.jpg)


