முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வழக்கில் உத்தரவு

சிலைக்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. விசாரணை தொடர்ந்தாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. உங்கள் மீது தவறு இல்லை என்றால், ஏன் குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்கள்? என பொன் மாணிக்கவேல் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Tags :