இதுவா சமூகநீதி? - கிழித்தெடுத்த அன்புமணி ராமதாஸ்

by Staff / 21-11-2023 12:24:16pm
இதுவா சமூகநீதி? - கிழித்தெடுத்த அன்புமணி ராமதாஸ்

நெய்வேலியில் பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு 3,543 வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை 64 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி, நிலம் கொடுத்த மக்களுக்கு இவ்வளவு விரைவாக நீதியும், பட்டாவும் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை; உரிய விலையும் கிடைக்கவில்லை; வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. நிலம் கொடுத்தவர்களை 60 ஆண்டுகளாக திட்டமிட்டு ஏமாற்றி வரும் என்.எல்.சியும், தமிழக அரசும் இணைந்து அடுத்தக்கட்டமாக மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கு உழவர்களின் நிலங்களை பறிக்கத் திட்டமிட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories