தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

by Staff / 21-11-2023 12:19:43pm
தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

தமிழக விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து இவர்களில் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும் இன்று போராட்டம் நடைபெற உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வரும் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via