கூட்டணியை அறிவித்தது திமுக தலைமை

by Staff / 21-11-2023 12:13:21pm
 கூட்டணியை அறிவித்தது திமுக தலைமை

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமை இவ்வாறு அறிவித்துள்ளது. தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவுடன் நட்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா காங்கிரஸ்-க்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்கிறார்.

 

Tags :

Share via