அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்சம் பெற்று பண மோசடி கணவன் மனைவியை கைது செய்த போலீசார்

கடலூர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 40 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் தில்லை விடங்கன் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாதவன் சாரதி என்பவர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி விண்ணரசி துணை ஆட்சியராக இருப்பதாகவும் மாநில மத்திய அரசு அதிகாரிகள் மிக நெருக்கமானவர்கள் எனவும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடமிருந்து 11 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
Tags :