ஆபாச வீடியோ விவகாரம்: தேவகௌடா பேரன் மீது வழக்குப்பதிவு

by Staff / 29-04-2024 11:50:24am
ஆபாச வீடியோ விவகாரம்: தேவகௌடா பேரன் மீது வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டவர் முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெணகளுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியானது. அதில் உள்ள ஒரு பெண், பெண்பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via