100 கிலோ ரசாயன மாம்பழங்கள் அழிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வாரச்சந்தையில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி திடீர் சோதனை மேற்கொண்டார்.இதில் 10-க்கும் மேற்பட்ட மாம்பழக் கடைகளை சோதனை நடத்தியதில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்திருந்த சுமார் 100 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும் இதேபோல மாம்பழங்கள், வாழைப்பழங்களை ரசாயனக் கலவை மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :