செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

by Staff / 29-04-2024 11:42:54am
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார் என செந்தில்பாலாஜி தரப்பு வாதம் முன்வைத்தது. இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்எல்ஏவாக தொடரும் செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும் எனவும் நீதமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via