வி.பி.சிங்-க்கு தமிழ்நாட்டில் சிலை - முதல்வர் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சமூகநீதிக் காவலர் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய அவர், சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு இந்த அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர். அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்.
Tags :