பேருந்து மீது ரயில் மோதி 7 பேர் பலி
நைஜீரியா நாட்டில் நடந்துள்ள அதி பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். லாகோஸில் வியாழன் அன்று பயணிகள் பேருந்து மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டின் அவசரகால பதிலளிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாகோஸில் உள்ள இகேஜா பகுதியில் பணிக்கு அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்ட்ரா சிட்டி ரயிலில் மோதியது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 84 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :



















