ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி ராணுவ வீரர் கொலையில் திடுகிடும் சம்பவம்...

by Admin / 18-10-2023 10:59:53pm
ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி ராணுவ வீரர் கொலையில் திடுகிடும் சம்பவம்...

எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார் தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிறார்.கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி (27) என்ற இளைஞர் வேல்முருகன் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள மாடிப்படி வழியாக ஏறி மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர் வேல்முருகனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மாடி அறையில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி வந்த வேல்முருகன் அங்கேயே சுருண்டு விழுந்து  சில நிமிடங்களிலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக ,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில். கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் வேல்முருகனுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிய மாரிச்சாமிக்கும் பெண் தொடர்பில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் மேலும் வெம்பூரில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் வைத்து கடந்த 15ஆம் தேதியன்று இருவருக்கும் இடையே சாதிய ரீதியாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலை சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

ராணுவ வீரர் வேல்முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மாரிச்சாமியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.கைதான மாரிச்சாமியிடம்  தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கமணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் ஸ்ரீவைகுண்டம்  டிஎஸ்பி மாயவன்சைபர் கிரைம் டிஎஸ்பி உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் 200க்கும் மேற்பட்ட  போலீசார் வெம்பூர் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி ராணுவ வீரர் கொலையில் திடுகிடும் சம்பவம்...
 

Tags :

Share via