தூத்துக்குடிமாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலைகுடும்பத்தினரை சந்திக்க சென்ற கனிமொழி
தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை பொதுமக்கள் முற்றுகையிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது குறித்து பொதுமக்கள் கடுமையாக கேள்வி எழுப்பினர் இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் என்று கூறி அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு தொடக்கத்தில் புகார் அளித்த போது காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உங்கள் பிரண்ட்ஸ் ஓடி போயிருப்பார் என அலட்சியமாக பதிலளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்கள் சென்ற காரை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஏ.டி.எஸ்.பி தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அரசு அவர்களை பாதுகாக்காது .விரைவில் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி அளித்த கனிமொழி முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையின் ஆய்வில் உள்ளது. மார்ச் 16 அன்று அரசு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்திரவிட்டுள்ளது.
Tags :


















