எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய தந்தை

by Editor / 04-06-2026 04:27:13pm
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய தந்தை

நாங்குநேரி அருகே தங்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள் மற்றும் மருமகன் வசித்து வந்த வீட்டின் மீது, ஆத்திரமடைந்த தந்தை பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தப்பியோட முயன்ற பெண்ணின் தந்தை முருகனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo