பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை..20 மணிநேரம் சித்ரவதை

by Editor / 20-05-2025 04:16:45pm
பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை..20 மணிநேரம் சித்ரவதை

கேரளா: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த வீட்டில் 5 பவுன் நகை திருடு போயுள்ளது. இதன் விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற அப்பெண்ணை மகளிர் போலீசார் நிர்வாணமாக்கி சோதனை செய்தது மட்டுமின்றி 20 மணிநேரம் சித்ரவதை செய்துள்ளனர். மறுநாள் தங்க சங்கிலி கிடைத்தும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via