தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி

இந்தோனேஷியாவின் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், நேற்று பெய்த கனமழையால் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து, பயங்கர சத்தத்துடன் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து, சுரங்கத்தில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :