மகளை பலாத்காரம் செய்த சிறுவனை கொன்ற பெற்றோர்

by Editor / 06-06-2025 04:14:49pm
மகளை பலாத்காரம் செய்த சிறுவனை கொன்ற பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில், மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 16 வயது சிறுவனை, சிறுமியின் பெற்றோர் கொலை செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர், தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சிறுவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via