புதியதாக எத்தனை கட்சிகளும் வந்தாலும் பரவாயில்லை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

by Staff / 24-08-2024 04:46:31pm
புதியதாக எத்தனை கட்சிகளும் வந்தாலும் பரவாயில்லை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கி பேசுகையில் அதிமுகவினர் எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டிய காலம் 
அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கடமை என்று பணியாற்றாமல், கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்.அப்போது தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க முடியும்.அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.கதிர் விளைந்திருக்கு அதை நாம் அறுவடை செய்ய வேண்டும்.
அதிமுக என்ற விவசாய நிலத்தில் கதிர் விளைந்து தயராக இருக்கிறது.திமுக ஒரு பதர் - அங்கு விளைச்சல் இல்லை புதியதாக எத்தனை கட்சிகளும் வந்தாலும் பரவாயில்லைஎம்.ஜூ.ஆர் அதிமுகவினை தொடங்கிய பின்னர் பலர் கட்சி ஆரம்பித்தனர்.*ஆனால் எம்ஜூஆர் தொடங்கிய அதிமுக மட்டும் தான் அரை நூற்றாண்டு காலத்தை தாண்டி தமிழகத்தில் முதன்மையான இயக்கமாக இருக்கிறது என்ற பெருமை நம்முடைய கட்சி தான். அந்த கட்சியில் நாம் இருப்பது பெருமை தான் என்றார்"

 

Tags :

Share via