மீண்டும் தேர்தலில் களமிறங்கும் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள தேர்தலில் போட்டியிட தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடியரசுக் கட்சியினரிடமிருந்து அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அவர் மூன்றாம் தரப்பு வேட்பாளராக போட்டியிட விரும்புகிறார் என தெரிய வந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் .’The Coming Split’ என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த அவர், இதுவரை ஒரு பிரசார நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :