ஸ்டாலின் முதல்வராக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதை ஒட்டி, பெண் தொண்டர் ஒருவர் கோவிலுக்கு நாக்கை துண்டித்து காணிக்கையாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பொதுவக்குடியை சேர்ந்தவர் கார்த்திக். திமுக தொண்டர். இவரது மனைவி வனிதா. இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வராக வர வேண்டுமென அங்குள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு வேண்டி உள்ளார். அவ்வாறு, நடந்தால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக வேண்டி உள்ளார்.
இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக தேர்தலில் திமுக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, வனிதா முத்தாலம்மன் கோவிலில், நாக்கை அறுத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
இதனை அடுத்து, அவர் பரமக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு வனிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேர்த்தி கடனுக்காக பெண் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பொதுவக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :