ராஜபாளையத்தில் காலையில் எடப்பாடியார் கலந்துகொள்ள இருந்த நிகழ்வுகள் ரத்து என தகவல்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற எழுச்சி பரப்புரையைக் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் ஐந்தாம் தேதி ஆறாம் தேதி தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் ஆறாம் தேதி காலையில் மிகவும் உடல் சோர்வுடன் இருந்த நிலையில் விடுதியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்வு விவசாயிகளிடம் மனு வாங்கும் நிகழ்வு மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு வழக்கறிஞர்களோடு சந்திப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் அதிக தூரம் நடக்காமல் குறிப்பிட்ட இடங்களுக்குள் காரிலேயே விடுதி வளாகத்திற்குள் நடைபெற்ற நிகழ்வுகளில் பயணித்தார் இந்த நிலையில் மாலை ஐந்து முப்பது மணி அளவில் கடையநல்லூரில் பரப்புரை மேற்கொண்ட அவர் புளியங்குடியிலும் பரப்புரையை மேற்கொண்டார் இதன் தொடர்ச்சியாக சங்கரன்கோவிலிலும் பரப்பரையை மேற்கொண்ட அவர் உடல் சோர்வு மற்றும் தீவிர தொண்டை வலி காரணமாக ராஜபாளையத்தில் ஏழாம் தேதி நடைபெறுவதாக இருந்த அனைத்து உள் அரங்க கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளன.
Tags : ராஜபாளையத்தில் காலையில் எடப்பாடியார் கலந்துகொள்ள இருந்த நிகழ்வுகள் ரத்து என தகவல்.