தண்டவாள பராமரிப்பு; மெமு ரயில்கள் ரத்து

by Editor / 06-08-2025 05:31:19pm
தண்டவாள பராமரிப்பு; மெமு ரயில்கள் ரத்து

வடகோவை பகுதியில் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஆகஸ்ட் 8ஆம் தேதி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு (ரயில் எண் 66615) மற்றும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு (ரயில் எண் 66616) இரண்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12675) மற்றும் சென்னை - கோவை சதாப்தி (ரயில் எண் 12243), எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12678) ஆகியவை கோவை சந்திப்பை தவிர்த்து, இருகூர்–போத்தனூர் வழியாக இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக, இவை போத்தனூர் நிலையத்தில் மாற்று நிறுத்தம் பெற்றிருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via