திமுக அரசின் தவறுகளை மறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண் பழி-நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் தவறுகளை மறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கஜா, மிக்ஜம் புயல்களால் தென்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்து ஆய்வு செய்ததை முதல்வர் மறந்தாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை பேரிடர் நிதியாக தமிழகத்திற்கு சுமார் ரூ.13,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார்” என்றார்.
Tags : நயினார் நாகேந்திரன்