முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சென்ற கார் மீது தாக்குதல்  6 பேர் மீது போலீசார் வழக்கு 

by Editor / 11-11-2024 10:23:11am
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சென்ற கார் மீது தாக்குதல்  6 பேர் மீது போலீசார் வழக்கு 

மதுரை உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய அமமுக நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அத்திபட்டியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கார்திருமங்கலம் நோக்கி மங்கல்ரேவு பகுதியை தாண்டி சென்ற போது, அமமுக நிர்வாகிகள் சிலர் காரை  வழிமறித்து டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி ஆர்.பி.உதயக்குமாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி,கார்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணுஆகியோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரையூர் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சென்ற கார் மீது தாக்குதல்  6 பேர் மீது போலீசார் வழக்கு 

Share via