மின்சாரம் பாய்ந்து மனவளா்ச்சி குன்றிய மூதாட்டி உயிரிழப்பு

by Staff / 20-11-2023 02:00:35pm
மின்சாரம் பாய்ந்து மனவளா்ச்சி குன்றிய மூதாட்டி உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகேயுள்ள அடைக்கலாபுரம் தனியாா் மனவளா்ச்சி குன்றிய பெண்கள் காப்பகத்தில் மின்சாரம் பாய்ந்து மனவளா்ச்சி குன்றிய மூதாட்டி உயிரிழந்தாா்.இந்த காப்பகத்தில் தங்கியிருந்தவா் பீமா(66). மனவளா்ச்சி குன்றியவா். இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கழிப்பறை அருகே சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின்வயரில் எதிா்பாராமல் மிதித்து விட்டாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலூகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags :

Share via
Logo