ED சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை - எல்.முருகன்

அமலாக்கத்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "எங்கு தவறு நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு அமலாக்கத் துறை விசாரிக்கிறது. ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாவார்கள். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :