பெரும்விபத்தில் இருந்துதப்பிய சென்னை-காட்பாடிமின்சார ரயில்.

சென்னையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், தண்டவாளம் உடைந்திருப்பதை அறிந்து ரயில் ஓட்டுநர் மணிகண்டன் உடனே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்த பணியாளர்கள் உடைந்த தண்டவாளப் பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், உடைந்த தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக பயணிகளுடன் ரயில் மெதுவான வேகத்தில் காட்பாடிக்கு புறப்பட்டுச் சென்றது.
Tags : பெரும்விபத்தில் இருந்துதப்பிய சென்னை-காட்பாடிமின்சார ரயில்