பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு வேட்டை.

by Staff / 17-04-2024 04:40:09pm
பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு வேட்டை.

விருதுநகர் பாராளுமன்ற அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வாசல் வரை பேரணியாக வந்து கோவில் முன்பாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக பேரணியின் போது கொட்டுமரசு அடித்துக் கொண்டே வாக்கு சேகரித்தார். தொடர்ந்து விஜய பிரபாகருக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.பிரச்சாரத்தில் பேசிய விஜய பிரபாகர் கூறுகையில்:

21 நாள் பிரச்சாரம் சுற்றுவந்திருக்கிறேன் ஆனால் இன்று தான் நானும் எனது தாயும் ஒரே வாகனத்தில் ஏறி பிரச்சாரம் செய்கிறோம்.இங்கு ஏற்கனவே அண்ணன் ராஜன் செல்லப்பா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டுமில்லாமல் என் சொந்த செலவிலும் செலவு செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.

 

Tags :

Share via

More stories